தமிழ்நாடு

தஞ்சை: கலர் ஃபுல்லா கண்களுக்கு விருந்தளித்த வடகிழக்கு மாநில நடன கலைஞர்களின் நிகழ்ச்சி

kaleelrahman

தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட வடகிழக்கு மாநில கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் வடகிழக்கு மாநில கிராமிய கலைஞர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை தென்னகத்தை சேர்ந்த மக்கள் அறியும் வகையில் மாபெரும் கலை நிகழ்ச்சி கடந்த 12- ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட கலைநிகழ்ச்சியில் அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாகாலாந்து மாநில குப்பிலி மணிப்பூர் மாநில லாய் ஹரபா, திரிபுரா மாநில சாங்ராய் மாக் ஆகிய பாரம்பரிய நடனங்கள் சிறப்பாக நடைபெற்றது, இந் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் 6 மாநில கலைஞர்களும் ஒன்று கூடி பிரம்மாண்ட நடனத்தை நிகழ்த்தினர்.

அனைத்து மாநில கலைஞர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய இந்த நடனம் வண்ணமயமாக காட்சி அளித்தது. அவர்களின் பாரம்பரிய உடையணிந்தும் பாரம்பரிய இசை வாத்தியங்களை வாசித்தும் நடத்திய நடனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.