பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர் pt desk
தமிழ்நாடு

தஞ்சை | பங்குனி உத்திர திருவிழா – பால் காவடி எடுத்து வரும் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்

தஞ்சை அருள்மிகு. அங்காள ஈஸ்வரி முனிஸ்வரர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர்மோர், எலுமிச்சை பழம் ஜூஸ் மற்றும் தர்பூசணி வழங்கி தாகம் தீர்த்தனர்.

PT WEB

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சை பர்மா காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. அங்காள ஈஸ்வரி முனிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வருகின்றனர். திருவிழா கோலம் பூண்டுள்ள அப்பகுதியில் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இவர்களோடு பர்மா தமிழ் முஸ்லிம் அமைப்பினர், ஜமாத்தார்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பாக நீர்மோர் பந்தல் அமைத்து எலுமிச்சை பழம் ஜூஸ், நீர்மோர், தர்பூசணி வழங்கி பக்தர்கள், பொதுமக்கள் தாகம் தீர்த்து வருகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இவர்களது செயல் அமைந்துள்ளது.