தமிழ்நாடு

குடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு

குடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு

webteam

தஞ்சை அருகே குடிபோதையில் மனைவியை மண்வெட்டியால் கணவன் தாக்கியபோது தடுக்க வந்த இரண்டு மகன்களுக்கும் படுகாயம் ஏற்பட்ட நிலையில், மூன்று பேரும் உயிரிழந்தனர். 

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டையில் குடிபோதையில் இருந்த ஜெயக்குமார் என்பவர், தனது மனைவி அனிதாவை மண்வெட்டியால் தாக்கியிருக்கிறார். அனிதா படுகாயமடைந்த நிலையில், அதைத் தடுக்க வந்த 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களும் தாக்கப்பட்டு படுகாயடைந்திருக்கின்றனர். இந்நிலையில் படுகாயமடைந்த தாய் மற்றும் இரண்டு மகன்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மகன்கள் இருவரும் உயிரிழந்தனர். 

தாய் அனிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் ‌தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரைத் தேடி வருகின்றனர். அனிதா தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்ததாகவும், ஜெயக்குமார் தி‌னமும் குடித்துவிட்டு சண்டைபோட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.