மூணாறு நிலச்சரிவு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று கேரளா முதல்வரிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். காணாமல் போன 80-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மூணாறு நிலச்சரிவு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ''கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்; மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என உறுதியளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.