உலகத்திலேயே இரண்டு மொழிகளில் கையெழுத்து போடுபவர்கள் தமிழர்கள் தான் என நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித்தேர்தலையொட்டி, ஆவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தமிழனுக்கு அவன் உயிர் உடலில் அல்ல. மொழியில் இருக்கிறது. தமிழன் தமிழனாக இருக்கும்வரை, தமிழன் அல்லாதவன் இந்த நாட்டை ஆள்வது கடினம். எல்லா இடத்திலும் தமிழ் என்கின்றனர். ஆனால், இரண்டு மொழிகளில் கையெழுத்து போடும் ஒரே இனம் தமிழன் தான். தாய் மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார்கள்.
ஜெர்மனி, பிரெஞ்ச், ஸ்பானிஷ் உலகத்தில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் யாரும் தங்கள் மொழியை விடுத்து மற்ற மொழிகளில் கையெழுத்து போட மாட்டார்கள். தங்கம் தென்னரசு எல்லாரும் தனது முதல் எழுத்தான தலைப்பெழுத்தை தமிழில் போட வேண்டும் என அறிவிப்பாரா?. கட்சிக்காரர்களை முதலில் மாற்ற சொல்லுங்கள்'' என்று பேசினார்.