தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை எப்போது?: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!

தென்மேற்கு பருவமழை எப்போது?: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!

webteam

தென்மேற்கு பருவமழை வரும் 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. மற்ற இடங்களில் வறண்ட வானிலை இருக்கும். திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் , திருத்தணியில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும்.

அந்தமான் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாற உள்ளது. அந்தமான் நிகோபார் பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு என தெரிவித்துள்ளது