ஸ்மார்ட் சிட்டி நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மிகக் குறைந்த நிதியைக் கூட தமிழக அரசு செலவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற அமைச்சரவை தாக்கல் செய்த அறிக்கையில், மற்ற மாநிலங்களைவிட குறைவான நிதியைத்தான் தமிழக அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க கடந்தாண்டு மத்திய அரசு ஒதுக்கிய 196 கோடி ரூபாயில் இருந்து ஒரு விழுக்காடு கூட தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மட்டும் அதிகபட்சமாக 7 கோடியே 27 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாகவும், சேலம் மிகக் குறைவாக 5 லட்சம் ரூபாயை மட்டுமே செலவு செய்துள்ளாதகவும் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி 3 கோடியே 82 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.