தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள்: தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள்: தமிழக அரசு முடிவு

webteam

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை சம்பவம் நீண்ட கால பிரச்னையாக உள்ளது. அத்துடன் சமீபத்தில் மணல் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டதால், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மணல் கடத்தலை தடுப்பது மற்றும் ஆன்லைன் மணல் விற்பனையின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

 சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

அதில், கரூரில் 8 குவாரிகள், நாகையில் 4 குவாரிகள் என மொத்தம் 70 குவாரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்குவது தொடர்பாக அப்போது தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளை, மணல் தட்டுப்பாடு, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்க அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.