27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களிலும், திமுக 2 ஆயிரத்து 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.