தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதி தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 27ஆம் தேதி கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் விலகுவதற்கான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.