ஜல்லிக்கட்டு file
தமிழ்நாடு

400 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்.. கால்நடை பராமரிப்புத் துறை அறிவிப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு 400 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

PT WEB

பொங்கல் திருநாளை முன்னிட்டு 400 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என பல பெயர்களில் மாடு பிடிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைக்கும் வகையில் www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தை அரசு தொடங்கியிருக்கிறது.

இந்த இணையதளத்தில் போட்டி நடக்கும் ஊர், காளை மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து அனுமதி சீட்டு பெறுவது அவசியம் என கால்நடை பராமரிப்புத் துறை சிறப்புத் திட்ட அதிகாரி நவநீத கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.