தமிழ்நாடு

போலீசாரின் சம்பளக் கணக்கு ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றம்

போலீசாரின் சம்பளக் கணக்கு ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றம்

webteam

சென்னை காவல் துறையினருக்கான வங்கி சம்பளக் கணக்கு, ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை சென்னை பெருநகர காவல் துறையின் நிர்வாக அதிகாரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பவர் சல்யூட் சம்பளக் கணக்கான அதில், 30 லட்ச ரூபாய் வரை தனிநபர் விபத்து காப்பீடு வசதி கிடைக்கும். நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் 30 லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்க பாலிசி வகை செய்கிறது. ஆக்சிஸ் மற்றும் எந்த வங்கி ஏடிஎம்மிலும் உச்சவரம்பின்றி பணம் எடுக்கலாம். காவலர் குடும்ப உறுப்பினர்களில் மூவருக்கு பூஜ்யம் இருப்பிலான சேமிப்புக் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படும். விபத்துக் காப்பீடு தேர்வு செய்த காவலர் இறந்தால், அவரது ப்ளஸ் 2-க்கு மேற்பட்ட படிப்பில் சேரும் வாரிசின் உயர்கல்விக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுமட்டுமின்றி, வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனும் பெறலாம். வங்கிக் கணக்கின் பெரும்பாலான சலுகைகள் காவலரின் ஓய்வுக்குப் பிறகும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.