தமிழ்நாடு

வாக்கி டாக்கி கருவிகள் வாங்கியதில் முறைகேடா?: டிஜிபிக்கு உள்துறைச் செயலர் கடிதம்

வாக்கி டாக்கி கருவிகள் வாங்கியதில் முறைகேடா?: டிஜிபிக்கு உள்துறைச் செயலர் கடிதம்

webteam


தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி கருவிகள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது பற்றி டிஜிபி விளக்கமளிக்கக் கோரி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக டிஜிபிக்கு, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி எழுதியுள்ள கடிதத்தில் தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி கருவிகள் வாங்கும் ஒப்பந்த புள்ளிகளுக்கென அரசு ஒதுக்கிய தொகை 47 கோடியே 52 லட்சத்து 97ஆயிரத்து 400 ரூபாய் என்ற நிலையில், 83 கோடியே 46 லட்ச ரூபாய்க்கு வாக்கி டாக்கிகள் வாங்க எவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி எழுதியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ள நிரஞ்சன் மார்டி, ஒப்பந்தப் புள்ளி கோருவதில் ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றால், அதற்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கக்கூடாது என்று அரசு விதி உள்ள நிலையில், அதனை மீறி பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கியது ஏன் என்றும் உள்துறை செயலாளர் வினவியுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை போட்டியின்றி ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாதது ஏன் என்றும் நிரஞ்சன் மார்டி கேள்வி எழுப்பியுள்ளார்.