தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் புதியவர்களை சேருங்கள்: ஓபிஎஸ்- எடப்பாடி கூட்டாக உத்தரவு

webteam

வாக்காளர் பட்டியலில் புதிய நபர்களை சேர்க்கும் பணியினை மேற்கொள்ளுமாறு தங்களது நிர்வாகிகளை அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி கூட்டாக கேட்டுக் கொண்டுள்ளது. 

இது தொடர்பாக அதிமுக இணைக்கப்பட்ட அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான முகாம் வரும் 8ம் தேதி மற்றும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் தங்களது கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய வாக்காளர்களுக்குத் தேவையான படிவங்களை பூர்த்தி செய்து அவற்றை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு முடிக்கப்பட்ட பணிகள் குறித்து தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் அதற்கான நபர்களை நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். 

இதேபோல் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுக்கு தனியாக அறிவுறுத்தியுள்ளார்.