தமிழ்நாடு

உதய் மின்திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு

webteam

மின்சார விநியோக நிறுவனங்களின் நிலையை சீர்திருத்த வகை செய்யும் உதய் மின் திட்டத்தி‌ல் தமிழக அரசு இணையவுள்ளது.

உதய் மின்திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், அதன் சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இணையாமல் இருந்து வந்தது. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசுடன் கடந்த மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்தி வந்த தமிழக அரசு, உதய்மின் திட்டத்தில் இணைய முடிவு செய்ததுள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதய்மின் திட்டத்தில் இணைவதால், மின்வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க மாநில அரசுக்கு குறைந்த வட்டியில் மத்திய அரசின் கடன் கிடைக்கும். இதன்மூலம், மின்விநியோக நிறுவனங்கள் இழப்பில் இருந்து மீள வழியேற்படும். அதோடு புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும்.