தமிழ்நாடு

அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ்

அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ்

webteam

இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் விழங்குவதாக துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் இது 32.04%. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடமாக இருக்கிறது என்று கூறினார்.