தமிழ்நாடு

கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கிடும் முறை

Sinekadhara

கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையை பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின்நுகர்வோரே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண விவரம், குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.