தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 56 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 70 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக கே.சு.பழனிசாமியும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கிரண் குராலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 70 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாகவும், 7 ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும், 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப்மிட்டல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம் டிஜிபியாக பணியை தொடர்கிறார். மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக உள்ள பாலநாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, அதே பிரிவில் பணியை தொடர்வார் என்றும், கூடுதல் பொறுப்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபி பணியை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபியாக உள்ள மகேஷ்வர்தயாள், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசி ஐடிஐஜியாக உள்ள அன்புக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வுவழங்கப்பட்டுள்ளது. தென்மண்டல காவல்துறை ஐஜி பிரேம்ஆனந்த் சின்ஹா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை அமலாக்க பணியகம் ஏடிஜிபியாக உள்ள அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.