டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின், பழைய இல்லத்தின் பெயரை ‘வைகை இல்லம்’ எனவும், புதிய இல்லத்தின் பெயரை ‘பொதிகை இல்லம்’ எனவும் மாற்றி நேற்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தின் பெயரிலிருந்து ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு என்ற வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டு, ‘வைகை தமிழ்நாடு இல்லம்’ என்றும், ‘பொதிகை தமிழ்நாடு இல்லம்’ என்றும் புதிய பெயர் சூட்டப்பட்டு திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.