தமிழகத்தில் சொத்து வரி விகிதங்கள் 50 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
சொத்துவரி தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ள தமிழக உள்ளாட்சி நிர்வாகத்துறை, குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி தற்போது உள்ளதிலிருந்து 50 சதவிகிதத்திற்கு மிகாமல் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. வாடகைக் குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி தற்போது உள்ளதில் இருந்து 100 சதவிகிதத்திற்கு மிகாமல் உயர்த்தப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் அல்லாத மற்ற வகை கட்டடங்களுக்கும் தற்போதைய அளவிலிருந்து 100 சதவிகிதத்திற்கு மிகாமல் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணை சென்னை பெரு மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரி உயர்வு நடப்பு அரையாண்டு தொடக்கம் அதாவது ஜூலையிலிருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.