தென்னிந்தியாவில், தமிழகத்தில்தான் அதிக அளவில் தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பிராட்காஸ்ட் இந்தியா ஆய்வு நடத்தியது. இதன்படி, தமிழகத்தில் மட்டும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 97 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக நான்கு மணி நேரம் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை பார்ப்பதாகவும், பிரைம் நேரங்களில் அதாவது, மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப் பப்படும் நாடகங்கள் அதிக அளவு பார்வையாளர்களால் ஈர்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.