தமிழ்நாடு

ஜன.9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு

ஜன.9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு

webteam

தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த ரேஷ்ன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தைப்பொங்கலின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.

அது தவிர ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படும். 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசில் இருக்கும்.