தமிழ்நாடு

கேன் குடிநீருக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு: தமிழக அரசு வலியுறுத்தல்

கேன் குடிநீருக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு: தமிழக அரசு வலியுறுத்தல்

webteam

இட்லி, தோசை மாவு மீதான ஜிஎஸ்டி வரியை முற்றாக விலக்கிக் கொள்ள மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ஹைதராபாதில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ’20 லிட்டர் குடிநீர் கேன்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் விலக்கிக்கொள்ள வேண்டும். வணிகச் சின்னம் உள்ள, வணிகச் சின்னம் இல்லாத உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கிக்கொள்ள வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட 28 சதவிகித வரியை குறைக்க வேண்டும்’என்று கேட்டுக்கொண்டார்.