தமிழ்நாடு

தமிழ்நாட்டு போக்குவரத்து துறையினருக்கு பொங்கல் போனஸ்... யாருக்கு எவ்வளவு தெரியுமா?

webteam

போக்குவரத்து ஊழியருக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இவர்கள் அனைவருக்கும் பொங்கலை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 200 நாட்கள் அதற்கு மேல் பணி புரிந்த பணியாளர்களுக்கு தலா 625 ரூபாயும், 91 முதல் 151 நாட்களுக்குள் பணியாற்றிய ஊழியர்களுக்கு தலா 85 ரூபாயும், 151-200 நாட்களுக்குள் பணியாற்றிய ஊழியர்களுக்கு தலா 195 ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதற்காக ரூபாய் 7.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் 1,17,129 ஊழியர்கள் பயன்பெறுவர்.