ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி PT Desk
தமிழ்நாடு

பழங்குடியின மக்களின் கலாசாரத்தை காப்பதாக சுரண்டல் நடைபெறுகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

webteam

கிண்டி ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தினம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில உதய நாள் விழா நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் காரணங்களுக்காகவே மாநில தினங்கள் கொண்டாடப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநில தினங்களை கொண்டாடும்போது மாநிலத்தின் கலாசாரத்தையும் கொண்டாட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார். நம் குடும்பத்தின் ஒரு அங்கமாக உள்ள பழங்குடியின மக்களை பின்தங்கிய மக்களாக மட்டுமே பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பழங்குடியின மக்கள் கலாசாரத்தை காக்க வேண்டும் என்ற பெயரில் மிகப்பெரிய சுரண்டல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

பழங்குடியின மக்கள் அனைத்து உயர் பதவிகளுக்கும் வரவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி அடைய முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.