மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பெற்றோரை இழந்திருப்பவர்களுக்கு கல்வி உதவி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதுடன், பிள்ளைகளை இழந்து தவிக்கும் வயது முதிர்ந்த பெற்றோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்