தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலில் 11,744 பேர் பாதிப்பு

webteam

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 11,744 பேர் டெங்குக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பூச்சிகளால் பரவும் நோய்களின் நிகழ்வுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், நடப்பு ஆண்டில், நேற்று முன்தினம் வரை டெங்கு காய்ச்சலால் 11 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெறிநாய்க்கடியால் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மலேரியா, சிக்குன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், லெப்டோஸ் பைரோஸிஸ், ஸ்கரப் டைபஸ் போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களினால் பாதிப்பு மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.