தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை அளிப்பதற்கென 2 இடங்களில் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா ஆட்கொல்லி வைரஸின் தாக்கம் தமிழகத்தில் 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமைப்படுத்தும் மருத்துவமனைகளையும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
அதன்படி, சென்னை - தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, தஞ்சாவூர் செங்கிபட்டி காசநோய் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் விரைவில் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகம் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.