தமிழ்நாடு

601 கிலோ வெள்ளி; 18 டிவி; 8376 புத்தகங்கள்; வெளியானது ஜெயலலிதா வீட்டு இரகசியம்

601 கிலோ வெள்ளி; 18 டிவி; 8376 புத்தகங்கள்; வெளியானது ஜெயலலிதா வீட்டு இரகசியம்

webteam

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 32 ஆயிரத்து 720 பொருட்கள் இருக்கின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்க பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 32 ஆயிரத்து 720 பொருட்கள் இருக்கின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது., “தங்கம் 4 கிலோ (372 கிராம்) - 14 பொருட்கள், 601 கிலோ வெள்ளிப் பொருட்கள் - 867 பொருட்கள், புத்தகங்கள் 8376, உடைகள், காலணிகள், துண்டு, பெட்சீட், தலையணை உறை உள்ளிட்டவை 10438, டிவி 18, குளிர்சாதனப்பெட்டி 10, ஏசி 38, மரச்சாமான்கள் 556, அலங்காரப்பொருட்கள் 1,712, சூட்கேஸ்கள் 65, அழகு சாதனப்பொருட்கள் 108, மாங்காய், பலா, தென்னை,வாழை என மொத்தம் 13 மரங்கள், 394 நினைவு பரிசுகள், 29 தொலைப்பேசிகள், மொபைல் போன்கள், 251 மின்சாதன பொருட்கள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.