தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு அனுமதி

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு அனுமதி

webteam

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.