தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

Veeramani

பொங்கல் சிறப்பு தொகுப்பு - முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு உரிய தொகையை மண்டலங்களுக்கு விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு இடம்பெற்றுள்ள முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூபாய் 62 என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மண்டல இணைப்பதிவாளர்கள் தமது மண்டலங்களில் உள்ள அனைத்து தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மற்றும் ஏலக்காய் 10 கிராம் அடங்கிய தொகுப்பினை கொள்முதல் செய்து விநியோகிக்க ஏதுவாக கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை பின்பற்றி தேவையான தொகையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் பெற்று மண்டல இணைப்பதிவாளர்களுக்கு காலதாமதமின்றி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்