தமிழ்நாடு

மாணவர்கள் மீது அக்கறை இல்லாத தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாணவர்கள் மீது அக்கறை இல்லாத தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Rasus

மக்கள் மீதோ, மாணவர்கள் மீதோ சிறிதும் தமிழக அரசுக்கு அக்‌கறையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்‌ குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் டெல்லி செல்வது மக்களின் நலன் கருதி அல்ல. அவரவர்களின் நலன் கருதியே. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை, வருமான வரித்துறையினரின் நடவடிக்கை ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும். தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் டெல்லி செல்கின்றனர். தமிழக மக்கள் மீதோ குறிப்பாக தமிழக மாணவர்கள் மீதோ தமிழக அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை" என குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே, திமுக மா‌வட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20-ம் தேதியன்று சென்னையில் நடைபெறும் என அக்கட்‌சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செயல் தலைவ‌ர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது முரசொலி பவள விழா மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் பற்றி விவாதிக்கப்படும் எனவும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.