தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை நோய்க்காக 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு

கருப்பு பூஞ்சை நோய்க்காக 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு

Sinekadhara

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் பலர் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இது முற்றிலும் குணப்படுத்தப்படக்கூடிய நோய் என சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.