ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கர்நாடகாவில் கரை சேர்ந்த 453 மீனவர்கள் தமிழகம் திரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கர்நாடக மாநில கடற்கரை பகுதியான மால்பேயில் 120 படகுகளில் 327 மீனவர்கள், கார்வார் பகுதியில் 9 படகுகளில் 126 மீனவர்கள் என மொத்தம் 453 மீனவர்கள் கரை சேர்ந்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 453 மீனவர்களுக்கும் உடனடி நிர்வாரண உதவித்தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 9 லட்சத்து ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை, உணவு வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் படக்களுக்கு தேவையான் எரி பொருள் வழங்கப்பட்டு அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு செலல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.