தமிழ்நாடு

இலங்கை சிறையில் இருந்த 53 மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்த 53 மீனவர்கள் விடுவிப்பு

webteam

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 53 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 53 மீனவர்கள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா -இலங்கை இடையே‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 53 மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.