இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேரையும் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கவிருப்பதால், நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 மீனவர்களும், வவுனியா சிறையில் இருந்து 8 மீனவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலையாகும் தமிழக மீனவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு ஓரிரு நாட்களில் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.