தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பேரணியின்போது, நடனமாடியும், ஒப்பாரி வைத்தும் விவசாயிகள் நூதனப் போராட்டம் செய்தனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற விவசாயிகளை, காவல்துறையினர் தடுப்புவேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். முன்னதாக, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.