தமிழ்நாடு

ஏசி பயன்பாட்டால் அதிகரித்துள்ள மின்சாரத் தேவை

ஏசி பயன்பாட்டால் அதிகரித்துள்ள மின்சாரத் தேவை

webteam

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சாரப் பயன்பாடும் கணிசமாக உயர்ந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொளுத்தி வருகிறது. மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதென்பது, கடினமான செயலாக உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் வெயிலுக்கு பயந்து கொண்டே வெளியே வருவதில்லை. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, அதிகப்படியான மக்களின் வீடுகளில் ஏசிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின்சாரத்தின் தேவை உயர்ந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் மின்தேவை 28.4.18 அன்று 15,440 மெகாவாட் என்ற உச்ச நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 15,335 மெகாவாட் பயன்படுத்தப்பட்டது தான் உச்சபட்சமாக தேவையாக இருந்தது. இருப்பினும் இந்த மின்தேவையை மின்வாரியம் தானாகவே பூர்த்திசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.