உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை வரையறை செய்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றியும் விளக்கம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.