annamalai
annamalai pt desk
தமிழ்நாடு

”ஊழல் அமைச்சரை கருணாநிதி நீக்கினார்: அவரிடமிருந்து கூட ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை” – அண்ணாமலை

webteam

ஈரோடு மாவட்டம் சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே 'ஈரோட்டில் கூட்டம்... தமிழகத்தில் மாற்றம்...' என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை, ஈஸ்வரன் படத்திற்கு வம்சாவளிகளுடன் மலர்தூவி ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து நரிக்குறவர் சமுதாயத்தினரை எஸ்.டி பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாசி மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.

annamalai

இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை,

“அரசியல் மாற்றம் ஈரோட்டில் இருந்து துவங்க உள்ளது. திராவிட மாடல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் மூலம் பட்டி மாடலாக இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து நரிக்குறவர் சமுதாயத்தினர் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். இதுதான் பாஜகவின் சமூக நீதி. மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது 11வது பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இன்று 5 வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. 2014-ல் பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்தார். 2024-ல் மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் 39 தொகுதிக்கு 39 தொகுதிகளை பாஜக, பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவார்கள். 2024 சித்தாந்த அடிப்படையில் தேர்தல் நடைபெறும். மோடி தமிழகத்தில் 56 லட்சம் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். ஆட்டை கூறு போடுவது போல் 2004ல் இந்தியாவை கூறுபோட்டுக் கொண்டார்கள். 2ஜி ஊழல், உலக வரலாற்றில் முதலில் வருபவர்களுக்கு முதல் சர்வீஸ் என்ற அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.

யூனிபார்ம் சிவில் கோர்ட் ஆதரவாக அம்பேத்கர் பேசியதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினிக்கு ஒரு லட்சம் பிரதிகள் அனுப்பப்படும்.

public meeting

இதை இந்தியாவில் மோடியால் மட்டுமே கொண்டு வரமுடியும். 2014ல் இந்தியாவை கூறு போட்ட கும்பல் தற்போது பாட்னாவில் மீண்டும் ஒன்று கூடியுள்ளனர். அடிப்படை புரியாமல் முதல்வர் ஸ்டாலின் யூனிபார்ம் சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்.

செந்தில் பாலாஜியை சந்திக்காத ஒரே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தான்.

சித்தாந்தம் அடிப்படையில் இரண்டு ஊழல் அமைச்சரை கருணாநிதி நீக்கினார். அவரிடமிருந்து கூட ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை.

கே.என்.நேரு, ஏ.வ.வேலு, துரைமுருகன் ஆகியோர் இலவு காத்த கிளி போல் உள்ளனர். தமிழகத்திற்கு பொருத்தமற்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைப்பதை முதல்வர் எள் அளவும் தடுக்க முடியாது. திருவள்ளுவர் ஆசைப்பட்டதை மோடி மொழி பெயர்த்து உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். இந்தியாவில் மத அரசியல் எடுபடாது. 2024ல் மத அரசியலை மோடி உடைக்கப் போகிறார். 2024ல் தமிழகத்தில் பாஜக காலூன்ற இருக்கிறது. பாஜக தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் 39க்கு 39ல் பாஜக, பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

cm stalin

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில் திமுக இரண்டு பக்கமும் சண்டை போடும் விவசாயிகளாக மாற்றியுள்ளனர். கருத்து கேட்புக் கூட்டம் இல்லை; பேசவில்லை; திமுகவிற்கு திட்டம் நிறைவேற்றுவது குறித்து எண்ணம் இல்லை. கமிஷன் வாங்கிய காரணத்தால் வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பணியை தொடங்கி இருக்கிறார்கள். இது சரியான போக்கு இல்லை. மத்திய அரசு கொடுத்த 933 கோடியை கமிஷனுக்காக இந்தியா -பாகிஸ்தான் போன்று விவசாயிகளை தூண்டி விட்டுள்ளார்கள்” என குற்றம்சாட்டினார்.