முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PT
தமிழ்நாடு

“கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம்..”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

PT WEB

“தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்” என கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதன்பேரில் தற்போது மதுரையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 15) திறந்தவைத்தார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ஹெச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி ஆகியோர் பங்கேற்றனர்.

நூலகத்தின் திறப்பு விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என சுமார் 70 ஆயிரம் பேர் விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், இந்த மதுரை தமிழ்நாட்டுடைய கலைநகரம். தலைநகரில் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஏற்படுத்தி தந்தார் அவரின் தம்பி கலைஞர். இன்று அந்த தலைவர் கலைஞருடைய நூற்றாண்டில், இந்த கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்துள்ளேன்” எனக்கூறி பெருமிதப்பட்டார். முதல்வர் பேசியவற்றின் முழு விவரத்தை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.