இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரமதர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5-ஆம் தேதி 8 தமிழக மீனவர்களையும், 2 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களையும், 143 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.