தமிழ்நாடு

ஞாநி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

ஞாநி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

webteam

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, கே.கே.நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, ஞாநி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நாடக ஆசிரியர், கட்டுரையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஞாநி. பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய கடின உழைப்பாளி. அனைவரிடமும் எளிமையாக பழகும் பண்பாளர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.