தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுவரை 6 அமைச்சரவைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் நீட் விவகாரம், போக்குவரத்து பிரச்னை, மின்வாரிய ஊழியர் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வரும் 16ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது.