தமிழ்நாடு

பிப்.11 முதல் 14 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்!

பிப்.11 முதல் 14 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்!

webteam

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 11 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

2019- 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் தாக்கல் செய்யும் 2 வது பட்ஜெட் இது.

இந்தப் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் வரும் 11 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் 14 ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான பதிலுரையை நிகழ்த்துகிறார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை செய்தியாளர்களிடம் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.