தமிழ்நாடு

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் சபாநாயகர் தனபால்

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் சபாநாயகர் தனபால்

Rasus

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சபாநாயகர் தனபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து வருபவர் தனபால். இவருக்கு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சபாநாயகரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் அன்பழகன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.