தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 16-ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புயல் உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யவில்லை. வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் வலுவிழந்ததை அடுத்து படிப்படியாக வானிலை மாறி தமிழகம், புதுச்சேரியிக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்ப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.