தமிழ்நாடு

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு வழிபாடு

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு வழிபாடு

webteam

ஆடி அமாவாசையொட்டி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேஸ்வரம் கடலில் இன்று அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி வருகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதே போல், நாகை மாவட்டத்தில் கோடியக்கரை கடலில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, பட்டுக்கோட்டை போன்ற முக்கியமான பகுதிகளிலிருந்து வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.