தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: கொரோனா தடுப்புக் குழு | கனமழைக்கு வாய்ப்பு | +2 பொதுத்தேர்வு- ஆலோசனை

விரைவுச் செய்திகள்: கொரோனா தடுப்புக் குழு | கனமழைக்கு வாய்ப்பு | +2 பொதுத்தேர்வு- ஆலோசனை

Sinekadhara

பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்.

கொரோனா பரவல் தடுப்புக் குழு: கொரோனா பரவல் தடுப்பிற்காக 13 பேர் கொண்ட நடவடிக்கை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான குழுவில் மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டில் பாரத் பயோடெக் அதிகாரிகள் ஆய்வு: செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள ஹெச்.எல்.எல் ஆலையில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?: தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் மிகக் குறைவாக உள்ள பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சசிகலா ஆடியோ - ஈபிஎஸ் பதில்: சசிகலா அதிமுகவில் இல்லை என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். கட்சியை வழிநடத்துவேன் என சசிகலா கூறியதாக ஆடியோ வெளியான நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பள்ளியின் தாளாளர், முதல்வரிடம் விசாரணை: சென்னையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரிடம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் 3 மணி நேரம் விசாரணையில் நடத்தினர்.

பயிற்சியாளரை 3 நாள் விசாரிக்க அனுமதி: பாலியல் புகாருக்கு ஆளான விளையாட்டு பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் விசாரிக்க காவல் துறைக்கு சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூர் வாரும் பணிகள் தீவிரம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் செலவில் ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் - கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து: கோவையில் நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்த புகாரில் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 9.5% வளர்ச்சி - ரிசர்வ் வங்கி: நடப்பு நிதியாண்டில் இந்தியா 9.5 சதவிகித பொருளாதார வளர்ச்சிபெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் அறிவித்துள்ளது.