தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: தமிழக அரசு திட்டங்கள் | தென்மேற்கு பருவமழை | ஏமாற்றும் வாட்ஸ்அப்

Sinekadhara

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வருகிற 9 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விளக்கமளித்துள்ளது.

தென்சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை: சென்னை கிண்டியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் 'கலைஞர் நினைவு நூலகம்': தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும் எனவும், மதுரையில் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாற்றிய காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை: கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய சுமார் ஒரு லட்சத்து 17ஆயிரம் காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் பயணச் சலுகை: மாற்றுத் திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை அளிக்கப்படும் என்றும், திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு - நாளை முக்கிய ஆலோசனை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா?, வேண்டாமா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும்?: சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை? என்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயனாளர்களை ஏமாற்றும் வாட்ஸ்அப்: புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனாளர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஒப்புதல் பெறுகிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் வரை இந்த மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.